பல்லடத்தில், வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 2 வங்கிகள் மூடப்பட்டது.

பல்லடத்தில், வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 2 வங்கிகள் மூடப்பட்டது.
x
தினத்தந்தி 4 May 2021 8:34 PM GMT (Updated: 4 May 2021 8:34 PM GMT)

பல்லடத்தில், வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 2 வங்கிகள் மூடப்பட்டது.

பல்லடம்
பல்லடத்தில், வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 2 வங்கிகள் மூடப்பட்டது. 
ஊழியர்களுக்கு கொரோனா
பல்லடத்தில் உள்ள கோவை-திருச்சி மெயின் ரோட்டில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் சுமார் 41 வயது ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, வங்கிக்கு விடுமுறை விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து வங்கி விடுமுறை குறித்து அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் வங்கியின் உள்ளேயும், வெளிப்புற வளாகம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளித்து, சுத்தப்படுத்தப்பட்டது. 
வங்கி மூடப்பட்டது
இதேபோல பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் வங்கி கிளையில் பணிபுரியும், அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த வங்கிக்கும் விடுமுறை விடப்பட்டது. பின்னர் வங்கி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் இரண்டு வங்கிகள் விடுமுறை விடப்பட்டதால், அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.

Next Story