மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் 3 கடைகளுக்கு ‘சீல்’ + "||" + Sealed for 3 shops in Dindigul

திண்டுக்கல்லில் 3 கடைகளுக்கு ‘சீல்’

திண்டுக்கல்லில் 3 கடைகளுக்கு ‘சீல்’
ஊரடங்கு விதியை மீறி செயல்பட்டதால் திண்டுக்கல்லில் 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
திண்டுக்கல்: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு, ஞாயிறுக்கிழமை முழுஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

அந்த வகையில் 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் பரப்பளவு கொண்ட கடைகள், வணிக வளாகங்களை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 

இதர கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

இதை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், திண்டுக்கல்லில் நேற்று மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர்.


அப்போது 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் பரப்பளவு கொண்ட 3 ஜவுளி கடைகள், 3 வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் திறந்து இருந்தன. 

இதில் 2 ஜவுளி கடைகள், ஒரு வீட்டு உபயோக பொருட்கள் கடையில் விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. 

இதையடுத்து அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, கடுமையாக எச்சரிக்கை செய்தனர். 

இதற்கிடையே திண்டுக்கல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன் தலைமையிலான அதிகாரிகள், தாடிக்கொம்பு சாலையில் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு தலா ரூ.500-ம், முக கவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூ.200-ம் அபராதமாக விதித்தனர்.

 அதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் 42 கடைகளுக்கும், முக கவசம் அணியாத 128 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.