மாவட்ட செய்திகள்

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகைகள் திருட்டு + "||" + Breaking the lock of a house near Coimbatore and stealing 39 pound worth of jewelery

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகைகள் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகைகள் திருட்டு
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
இடிகரை

கோவை அருகே  வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை

கோவை அருகே உள்ள செங்காளி பாளையம் ஸ்ரீ ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பரமானந்தம் (வயது 62). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கும் இவரது மனைவி, இவரது தாயார் மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில் இவரை தவிர மற்ற மூன்று பேரும் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.  

திதி கொடுத்தார்

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து இவர் இறந்த மூன்று பேருக்கும் திதி கொடுக்க சென்றார். அதன் பிறகு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கும் போது மிளகாய் பொடிகள் வீட்டின் முழுவதும் தூவப்பட்டு இருந்தன. 

மேலும் வீட்டில் பெட்ரூமில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 39 பவுன் தங்க நகைகளை  மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.  இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

வலை வீச்சு

இதனை தொடர்ந்து பரமானந்தம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.