மாவட்ட செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + College student commits suicide

கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை

கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகள் சினேகா (வயது 23). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வந்தார். கொரோனா நோய் பரவல் காரணமாக கல்லூரியில் வகுப்புகள் தடை செய்யப்பட்டது. 

ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. சினேகா ஆன்லைன் பாடங்களை சரியாக பின்பற்றாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மன விரக்தியில் காணப்பட்ட இவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
பொள்ளாச்சி அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.