பவானியில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத வங்கி மேலாளர்- டீக்கடை உரிமையாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்; கலெக்டர் கதிரவன் நடவடிக்கை


பவானியில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத வங்கி மேலாளர்- டீக்கடை உரிமையாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்; கலெக்டர் கதிரவன் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 May 2021 10:20 PM GMT (Updated: 4 May 2021 10:20 PM GMT)

பவானியில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத வங்கி மேலாளர்-டீக்கடை உரிமையாளருக்கு கலெக்டர் கதிரவன் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ஈரோடு
பவானியில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத வங்கி மேலாளர்-டீக்கடை உரிமையாளருக்கு கலெக்டர் கதிரவன் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
வங்கி மேலாளருக்கு அபராதம்
கொரோனா 2-வது அலை சுனாமியாக மாறி மனிதர்களை நடுங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் கதிரவன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் நேற்று பவானி மற்றும் காலிங்கராயன்பாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது காலிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் இருந்ததைக் கண்டு வங்கி மேலாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வங்கி செயல்பட கூடாது என்றும் உத்தரவிட்டார். இதேபோல் கொரோனா கட்டுப்பாடு இன்றி செயல்பட்டு வந்த ஒரு டீக்கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். 
சங்கமேஸ்வரர் கோவிலில்....
அதைத்தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். பின்னர் கூடுதுறை பகுதியில் சென்று பார்த்துவிட்டு அந்த பகுதியில் உள்ள கடைகளில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. 
பவானி பகுதியில் கலெக்டர் கதிரவன் அடிக்கடி ஆய்வு மேற்கொள்வதால் பவானி புதிய பஸ் நிலையம், அந்தியூர் பிரிவு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.
தனிமை முகாம்
அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தனிைம முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு அந்தியூர், பவானி, குருவரெட்டியூர், ஜம்பை பகுதியைச் சேர்ந்த 150 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நேற்று கலெக்டர் கதிரவன் இந்த முகாமுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் அவர்களுக்கு கிடைக்கின்ற மருத்துவம், உணவு வசதி குறித்து கேட்டறிந்தார். 

Next Story