மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + theft

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்
கோபியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 8 பவுன் நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
விற்பனை மேலாளர்
கோபி நாகமலை குடியிருப்பு விரிவாக்க வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35).  இவருடைய மனைவி கவுசல்யா.  சரவணன் வேலூரில் உள்ள ஒரு ஆயில் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 20-ந் தேதி கவுசல்யா வீட்டை பூட்டி விட்டு கணவரை சந்திக்க வேலூர் வென்றுவிட்டார். பின்னர் 30-ந் தேதி வீடு திரும்பினார்.
8 பவுன் நகை
அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், லேப்டாப், மற்றும் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து சரவணன் கோபி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருட்டு
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.
2. வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர
3. மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது
செந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகைகள் திருட்டு
ஜெயங்கொண்டத்தில் தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு திருட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்