மாவட்ட செய்திகள்

தலைவாசல் அருகேபெண் தற்கொலை + "||" + Female suicide

தலைவாசல் அருகேபெண் தற்கொலை

தலைவாசல் அருகேபெண் தற்கொலை
பெண் தற்கொலை
தலைவாசல்:
தலைவாசல் அருகே வேப்பம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவருடைய மனைவி பிரியா (வயது 21). இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரியா, விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே பிரியாவின் தாய் வசந்தி வீரகனூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளுக்கும், மருமகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக எனது மகள் தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கடன் தொல்லையால் பெண் தற்கொலை
கீழமணக்குடியில் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு ெபண் தற்கொலை
அருப்புக்கோட்டையில் தூக்குப்போட்டு பெண் தற்ெகாலை செய்து கொண்டார்.
3. பெண் தற்கொலை
பெண் தற்கொலை செய்துகொண்டார்.
4. விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.