மாவட்ட செய்திகள்

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில்சேலத்தில் காற்றுடன் சாரல் மழை + "||" + Windy showers in Salem

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில்சேலத்தில் காற்றுடன் சாரல் மழை

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில்சேலத்தில் காற்றுடன் சாரல் மழை
சேலத்தில் காற்றுடன் சாரல் மழை
சேலம்:
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நேற்று சேலத்தில் காற்றுடன் சாரல் மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் 4-ந்தேதி தொடங்கி, 29-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே அதிக அளவு வெயில் அடித்து வருகிறது. சேலத்திலும் கடந்த மாதம் அதிகம் வெயில் அடித்தது. ஒரு சில நாட்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் பதிவாகி இருந்தன. அப்போது பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத அளவில் வாட்டி வதைத்தது.
சாரல் மழை
இந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் 4 முதல் 6 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் 99.4 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதே என்று நினைத்து சேலத்தில் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்தனர். 
சேலத்தில் மதியம் 12 மணி அளவில் சில இடங்களில் அதிக அளவு வெயில் அடித்தது. மதியம் 1 மணி வரை இந்த நிலை நீடித்தது. பின்னர் 1.30 மணி அளவில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து 2 மணி முதல் மாலை வரை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காற்று அடித்ததாலும், மேக மூட்டத்துடன் சாரல் மழை ெபய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.