மாவட்ட செய்திகள்

மேட்டூரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டமின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி + "||" + Electricity worker killed by electricity

மேட்டூரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டமின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

மேட்டூரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டமின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
மேட்டூர்:
மேட்டூரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
மின் வாரிய ஊழியர்
மேட்டூர் அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 58). இவர் மின்வாரியத்தில் போர்மேன் ஆக பணியாற்றி வந்தார். நேற்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் பணியில் ஈடுபட்டபோது, அருகே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியின் மீது எதிர்பாராதவிதமாக அவரது உடல் உரசியது. இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் விரைந்து வந்து, பிரசாந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கருமலைக்கூடல் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
.................