மாவட்ட செய்திகள்

தாரமங்கலம் அருகே சிறுமி கற்பழித்து கொலை:தொழிலாளி தஞ்சம் அடைந்த முதியவரின் வீடு சூறை 9 பேர் மீது வழக்கு + "||" + The old man's house was looted Case against 9 people

தாரமங்கலம் அருகே சிறுமி கற்பழித்து கொலை:தொழிலாளி தஞ்சம் அடைந்த முதியவரின் வீடு சூறை 9 பேர் மீது வழக்கு

தாரமங்கலம் அருகே சிறுமி கற்பழித்து கொலை:தொழிலாளி தஞ்சம் அடைந்த முதியவரின் வீடு சூறை 9 பேர் மீது வழக்கு
முதியவரின் வீடு சூறை 9 பேர் மீது வழக்கு
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு கிராமம் கீழ்மாட்டையாம்பட்டி பகுதியில் 9 வயது சிறுமியை தனபால் என்ற நெசவு தொழிலாளி கற்பழித்து வெட்டிக்கொன்றார். இது படுபயங்கர சம்பவம் தொடர்பாக தனபாலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தனபால், கொலை சம்பவம் நடந்த அன்று அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 75) என்பவரது வீட்டில் தஞ்சம் அடைந்ததாக தெரிகிறது. இதை அறிந்த சிறுமியின் உறுவினர்கள் பழனிசாமியின் வீட்டை சூறையாடினார்கள். வீட்டில் இருந்த ஏ.சி., வாஷிங்மிஷின், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.