மாவட்ட செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை + "||" + Parental resistance to love Drinking poison Adolescent suicide

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,

திருவள்ளூரை அடுத்த சேலை கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் தீனா (வயது 20). இவர் தனது உறவினர் மகளை காதலித்து வந்தார். தன்னுடைய மகனின் காதலை அறிந்த அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தீனா கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலை பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே கொக்கு மருந்து (விஷம்) குடித்து அவர் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே கொக்கு மருந்து பாட்டில்களும் காணப்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீனாவின் தந்தை மாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.