முகப்பேரில் ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் ரூ.12 லட்சம் மோசடி


முகப்பேரில் ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் ரூ.12 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 May 2021 2:04 AM GMT (Updated: 5 May 2021 2:04 AM GMT)

முகப்பேரில் ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

திரு.வி.க.நகர், 

சென்னை முகப்பேர் மேற்கு 4-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராம்விலாஸ் (வயது 42). இவரது வீட்டின் லாக்கரில் இருந்த பணம் தொடர்ந்து காணாமல் போவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ரகசியமாக கண்காணித்து வந்ததில், 8-ம் வகுப்பு படிக்கும் அவரது 13 வயது மகன் பணத்தை எடுத்தது தெரியவந்தது. சிறுவனிடம் ராம்விலாஸ் இது குறித்து கேட்டபோது, ஆன்லைன் விளையாட்டில் வாலிபர் ஒருவரிடம் பணத்தை பறிகொடுத்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராம் விலாஸ் நொளபூர் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில், தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் சுகுமார் என்பவர் செல்போன் மூலம் ஆன்லைன் விளையாட்டில் சிறுவனை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த ஒரு வருடத்தில் வீட்டில் இருந்த பணம் சுமார் 12 லட்சம் ரூபாயை சிறுவன் கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்தது. ஆன்லைன் விளையாட்டிற்கு சிறுவனிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story