மாவட்ட செய்திகள்

வளசரவாக்கத்தில் அம்மா உணவக ஊழியரிடம் நகை பறிப்பு வாலிபருக்கு தர்ம-அடி + "||" + In Walasaravakkam Amma to the restaurant staff Jewelry flush fight to the teenager

வளசரவாக்கத்தில் அம்மா உணவக ஊழியரிடம் நகை பறிப்பு வாலிபருக்கு தர்ம-அடி

வளசரவாக்கத்தில் அம்மா உணவக ஊழியரிடம் நகை பறிப்பு வாலிபருக்கு தர்ம-அடி
வளசரவாக்கத்தில் அம்மா உணவக ஊழியரிடம் நகை பறிப்பு ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பூந்தமல்லி, 

வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வி (வயது 58). இவர் ஆழ்வார் திருநகரில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடித்து வீட்டிற்கு சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி சத்தம் போட்டதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் பெயர் ஜெயக்குமார் (28) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே சங்கிலி பறிப்பு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.