மாவட்ட செய்திகள்

மும்பை, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 2¾ லட்சம் கொரோனா தடுப்பூசிகள் + "||" + From Mumbai, Hyderabad Arrived in Chennai Corona vaccines

மும்பை, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 2¾ லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

மும்பை, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 2¾ லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
மும்பை மற்றும் ஐதராபாத்தில் இருந்து 2¾ லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
ஆலந்தூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக இருப்பதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து பிரதமா் மோடி உத்தரவின் பேரில், மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கோவக்சின் தடுப்பு மருந்துக்கு பல இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளதால் அதிக அளவில் அனுப்பி வைக்க தமிழக அரசு கோரியது. இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் டோஸ் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் 16 பார்சல்களை ஏற்றிக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து சேர்ந்தது.

சென்னை விமானத்தில் இருந்து வந்து இறங்கிய தடுப்பூசி மருந்து பார்சல்களை இறக்கி கன்டெய்னா் வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மருத்துவ தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து, நேற்று மதியம் மும்பையில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தன. இந்த தடுப்பூசிகளும் அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பூசி தேவைப்படும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அவை பிரித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை, தானே உள்பட 15 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைகிறது; சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
மராட்டியத்தில் மும்பை, தானே உள்பட 15 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
2. மராட்டியத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்: ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு போடப்பட்டது
மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. மும்பையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக 41 தடுப்பூசி மையங்கள் மூடல்
மும்பையில் நேற்றைய தினம் 45 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
4. மும்பையில் சரிந்து வரும் தொற்று பாதிப்பு; கொரோனா 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வருகிறதா? நிபுணர்கள் கருத்து
மும்பையில் தொடர்ந்து சரிந்து வரும் கொரோனா பாதிப்பால் 2-வது அலையின் உச்சம் முடிவுக்கு வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
5. மும்பையில் குடிசைப்பகுதிகளில் குறையும் கொரோனா பாதிப்பு
மும்பையில் குடிசைப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.