மாவட்ட செய்திகள்

சென்னை சி.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்தவர்: கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி + "||" + Chennai For corona infection Sub-inspector killed

சென்னை சி.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்தவர்: கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

சென்னை சி.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்தவர்: கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்த சென்னை சி.பி.சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கொரோனா தொற்றுக்கு பலியானார்.
ஆவடி, 

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னக்கண்ணு (வயது 55). இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

மேலும் கடந்த 6 ஆண்டாக நீதிபதி ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சோனூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்னகண்ணுக்கு மணிமொழி என்ற மனைவியும் ஹேமாவாணி என்ற மகளும், லோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். ஹேமாவாணி சென்னை ஆயுதப்படையில் போலீசிலும், லோகேஸ்வரன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியனில் போலீசாகவும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலையில் இதுவரை 8 போலீசார் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தன
ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
2. போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 50 விமானங்கள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து சென்று வரவேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
3. ஏப்ரல் 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. ஏப்ரல் 27: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. இதிலும் முத்திரை பதிக்கிறது சென்னை ஐகோர்ட்டு!
“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாரதியார் பாடினார் அன்று.