மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு: இரும்பு கம்பியால் அடித்து பெயிண்டர் கொலை நண்பர்கள் 2 பேர் கைது + "||" + Dispute over alcohol Beaten with an iron bar Painter murder Friends 2 arrested

மதுபோதையில் தகராறு: இரும்பு கம்பியால் அடித்து பெயிண்டர் கொலை நண்பர்கள் 2 பேர் கைது

மதுபோதையில் தகராறு: இரும்பு கம்பியால் அடித்து பெயிண்டர் கொலை நண்பர்கள் 2 பேர் கைது
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து பெயிண்டர் கொலை செய்யப்பட்டார்.
பூந்தமல்லி, 

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் (வயது 57). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது தனது மகன் தமிழரசன் (14), உடன் அங்கிருந்த ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (43), பழனிச்சாமி (46) ஆகியோருடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது திடீரென மூன்று பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாறி, மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் டேவிட் வீட்டில் இருந்த மூங்கில் கொம்பை எடுத்து வந்து இருவரையும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து டேவிட் தலையில் பலமாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார்.

இதையடுத்து, அங்குள்ளவர்கள் அவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் டேவிட் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த டேவிட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பழனிசாமி மற்றும் லட்சுமணன் ஆகிய 2 பேரை போரூர் போலீசார் கைது செய்து கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.