மாவட்ட செய்திகள்

வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு மின்ஊழியர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி + "||" + With another woman Counterfeiting love On the electrician Wife pouring hot water

வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு மின்ஊழியர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி

வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு மின்ஊழியர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி
நான் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாயா. மின்ஊழியர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் வி.ஆர்.ஐடல் ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (வயது 43). இவர் சென்னை அத்திப்பட்டு மின் வாரியத்தில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவுசியா.

இம்ரான் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி பவுசியா சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இம்ரான் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

கள்ளத்தொடர்பு காரணமாக ஆத்திரம் அடைந்த பவுசியா தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய கணவரை எட்டி உதைத்து இது சம்பந்தமாக தரக்குறைவாக திட்டி சண்டை பிடித்தார். நான் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாயா என்று கூறி வெந்நீரை எடுத்து அவரது மர்ம உறுப்பு, தொடைப்பகுதி, இடுப்பு போன்றவற்றில் ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி கூச்சலிட்டார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இம்ரான் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக பவுசியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.