மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு + "||" + Death of a woman who fell into a well

கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு

கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள பிராம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பிராம்பட்டியில் உள்ள கந்தையா கவுண்டர் கிணற்றில் குளிக்க சென்றபோது அங்கு கவிதா கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கவிதாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கவிதாவிற்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாம்பு கடித்து தொழிலாளி சாவு
சிங்கம்புணரி அருகே பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்.
2. கார் மோதி முதியவர் சாவு
மானாமதுரை அருகே கார் மோதி முதியவர் பலியானார்.
3. மனைவி உள்பட 3 பெண்களுக்கு கத்திக்குத்து; மாமியாரின் தங்கை சாவு
மனைவி உள்பட 3 பெண்களை வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் மாமியாரின் தங்கை கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு ரத்தம் சொட்டிய கத்தியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. பட்டாசு விபத்தில் தொழிலாளி பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
5. கொரோனாவுக்கு வாலிபர் சாவு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். மேலும் கள்ளக்குறிச்சியில் புதிதாக 157 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.