மாவட்ட செய்திகள்

கரூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் + "||" + Drinking water

கரூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

கரூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
கரூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்.
குடிநீர் வினியோகம்
கரூர் ஜந்து ரோடு அருகே அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழியில் அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. பின்னர் அதில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க பட்டு வருகிறது. 
இதன்மூலம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுடன் ஆடு, மாடுகளுக்கு தேவையான தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வந்தனர்.
கோரிக்கை 
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வீணாகி செல்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.இதனால் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா?
வெம்பக்கோட்டையில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க சென்ற அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க சென்ற அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது.
3. குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.
4. வீணாக ஓடும் குடிநீர்
ரோடு பாலத்தில் வீணாக ஓடும் குடிநீர்
5. குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது