மாவட்ட செய்திகள்

தொழிலாளி சாவு + "||" + Death

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு
தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
கரூர் 
கரூர் வேடிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (46). கூலிதொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாம்பு கடித்து தொழிலாளி சாவு
சிங்கம்புணரி அருகே பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்.
2. கார் மோதி முதியவர் சாவு
மானாமதுரை அருகே கார் மோதி முதியவர் பலியானார்.
3. மனைவி உள்பட 3 பெண்களுக்கு கத்திக்குத்து; மாமியாரின் தங்கை சாவு
மனைவி உள்பட 3 பெண்களை வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் மாமியாரின் தங்கை கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு ரத்தம் சொட்டிய கத்தியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. பட்டாசு விபத்தில் தொழிலாளி பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
5. கொரோனாவுக்கு வாலிபர் சாவு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். மேலும் கள்ளக்குறிச்சியில் புதிதாக 157 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.