பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2021 6:58 PM GMT (Updated: 5 May 2021 6:58 PM GMT)

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை,

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

 மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து சிவகங்கை நகர் ஒன்றிய பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. இதற்கு பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமை தாங்கினார். நகர் தலைவர் தனசேகரன் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் ராமபிரபு, சண்முகம், ஆறுமுகம், ஒன்றிய தலைவர்கள் புவியரசு, மழுவேந்தி மற்றும் உதயா, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ. பங்கேற்பு

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த சிவகங்கை சட்டமன்ற தொகுதி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தனது காரை நிறுத்தி இறங்கி வந்ாார். அவர் சிறிது நேரம் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பின்னர் அங்கு நின்ற சிலர் மம்தா பானர்ஜியின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

காரைக்குடி

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா கட்சி தொண்டர்களையும், பா. ஜனதா அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் அராஜகத்தை கண்டித்து காரைக்குடி நகர பா.ஜனதா கட்சி சார்பில் ஐந்து விலக்கு அருகில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் நாகராஜன்,மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகர நிர்வாகிகள் குமாரவேல், கார்த்தி, மாரியப்பன், மணிகண்டன், அருண்குமார், விசுவநாதன், ஆனந்த், விக்னேஷ், லட்சுமணன், பிரபாகரன். பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story