மாவட்ட செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை + "||" + Control room

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
கொரோனா காரணமாக பாதிக்கப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் புகார் குறித்து சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செல்ேபான் எண்:- 94424 18361, சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளரின் செல்போன் எண் 95669 55059, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளரின் செல்போன் எண் 73970 20057-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரம் பேருக்கு உதவி
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் 15 ஆயிரத்து 27 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ ஆலோசனை பெற 7 ஆயிரம் அழைப்புகள்; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ ஆலோசனை பெற இதுவரை 7 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
3. ஈரோட்டில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
ஈரோட்டில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது
4. தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
5. புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார் செய்வதற்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.