பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்: முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை


பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்: முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 May 2021 5:52 AM GMT (Updated: 6 May 2021 5:52 AM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை செயலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், இருமல், உடல்வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் உமிழ்நீர் பரிசோதனைக்கு உட்படுத்தி தொற்று இருக்கிறதா? என்று கண்டறிந்து, அதற்கு தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்கள் வெளியில் சுற்றுவதால் நோயை பிறருக்கு பரப்புவதற்கு ஏதுவாக அமையும். தேவையில்லாமல் விசே‌‌ஷங்களில், கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை

முக கவசம் அணியாமல் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோய் புதுவையில் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி நோயை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து தொற்றை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story