டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்


டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 6 May 2021 4:56 PM GMT (Updated: 6 May 2021 4:56 PM GMT)

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நேரம் குறைக்கப்பட்டதால் நாகையில் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

நாகப்பட்டினம்:
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நேரம் குறைக்கப்பட்டதால் நாகையில் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க  நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள், டீக்கடைகள்  உள்ளிட்ட கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும்  டாஸ்மாக் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை அறிந்த மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குவிந்த மதுப்பிரியர்கள்

இந்தநிலையில் நாகையில் புதிய பஸ் நிலையம், நல்லியான் தோட்டம், ெரயில்வே நிலையம், செல்லூர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க நேற்று காலை 8 மணி முதலே மதுப்பிரியர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். நேரம் செல்ல செல்ல கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் மதுபாட்டில்களை மொத்த மொத்தமாக வாங்கி சென்றனர்.
டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டதால் கூலி வேலைக்கு சென்று தினமும் மது அருந்துவோர் பாதிக்கப்பட்டனர். ஏனென்றால் வேலை முடிந்து சம்பளம் வாங்கி விட்டு மாலை 6 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது குடிப்பது அவர்களின் வழக்கமாக இருந்தது. 
தற்போது காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நான்கு மணி நேரம்  டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பதால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். இதனால். மதுக்கடைகளில் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்கப்படுகிறதா? என போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

Next Story