கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 390 பேருக்கு கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 390 பேருக்கு கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 May 2021 5:34 PM GMT (Updated: 6 May 2021 5:36 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பப்ட 584 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 ஆயிரத்து 352 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 
முககவசம்
தற்போது 2 ஆயிரத்து 435 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
======

Next Story