முடுக்கன்குளம் அருகே வீணாகும் குடிநீர்


முடுக்கன்குளம் அருகே வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 6 May 2021 7:37 PM GMT (Updated: 6 May 2021 7:37 PM GMT)

முடுக்கன்குளம் அருகே குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது.

காரியாபட்டி, 
அருப்புக்கோட்டை நகராட்சியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வந்தது. இதனடிப்படையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு திருப்புவனம் வைகை ஆற்றிலிருந்து புல்வாய்கரை, முடுக்கன்குளம் வழியாக அருப்புக்கோட்டைக்கு குழாய்கள் பதித்து தண்ணீர் வினிேயாகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட காலம் தண்ணீர் வினியோகம் இல்லாததாலும் குழாயில் அடிக்கடி தண்ணீர் உடைப்பு ஏற்பட்டதாலும் மீண்டும் பல கோடி ரூபாய் கோடி மதிப்பீட்டில் தற்போது புதிதாக குழாய் பதிக்கப்பட்டு திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தண்ணீர் செல்கிறது. 
 ஆனால் தற்போது குடிநீர் சென்று வரும் நிலையில் காரியாபட்டி முடுக்கன்குளம் அருகே ஒரு தொட்டி கட்டப்பட்டு அந்த தொட்டியில் இருந்து ஒரு குழாய் விடப்பட்டுள்ளது.  அந்த குழாய் மூலமாக தண்ணீர் நிரம்பி வீணாக பல நாட்களாக சென்று கொண்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் பயப்படுகின்றனர். எனவே குடிநீர் வீணாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story