மும்பையில் ரூ.21 கோடி யுரேனியத்துடன் 2 பேர் கைது


மும்பையில் ரூ.21 கோடி யுரேனியத்துடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2021 6:17 AM GMT (Updated: 7 May 2021 6:17 AM GMT)

மும்பையில் ரூ.21 கோடி யுரேனியத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 கிலோ யுரேனியம்

மும்பை நாக்பாடா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தானேயை சேர்ந்த ஜிகர் பாண்டியா(வயது27) என்ற வாலிபரை சிறிதளவு யுரேனியத்துடன் பிடித்தனர். அவர் யுரேனியத்தை சட்டவிரோதமாக விற்க முயன்ற போது போலீசாரிடம் சிக்கியிருந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது மான்கூர்டை சேர்ந்த அபு தாஹிர் அப்சல் ஹூசேன் சவுத்திரி(31) தான் வாலிபரிடம் யுரேனியத்தை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குர்லா பழைய பொருள் விற்பனையாளர்கள் சங்கத்தில் இருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 கிலோ 100 கிராம் யுரேனியத்தை பறிமுதல் செய்தனர்.

ரூ.21 கோடி

பின்னர் அந்த யுரேனியம் ஆய்வுக்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அது அதிக கதிரியக்க மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய இயற்கையான யுரேனியம் என்பது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட யுரேனியத்தின் மதிப்பு ரூ.21.3 கோடி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் அணு ஆற்றல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை வருகிற 12-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.


Next Story