மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் + "||" + Iraianbu IAS Appointed as a New Chief Secretary of Tamil Nadu

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக முக ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். அவரை தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.   

முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழக அரசில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளராக செயல்பட்டு வந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். 

தமிழக அரசின் தலைமை செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இறையன்பு ஐ.ஏ.எஸ். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.