தூத்துக்குடி அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு


தூத்துக்குடி அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 7 May 2021 12:48 PM GMT (Updated: 2021-05-07T18:18:52+05:30)

தூத்துக்குடி அருகே, முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 60). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரத்தினபாபு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் பொன்னுச்சாமி அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரத்தினபாபு அரிவாளால் பொன்னுச்சாமியை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுச்சாமி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story