மாநில செய்திகள்

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து + "||" + Formers Finance Minister PChidamparam Wishes TN CM MK Stalin

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதன்பின் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அ.தி.மு.க. சார்பில் ஓ பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.

காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகை வந்த மு.க ஸ்டாலின், கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர்,  அமைச்சர்களை கவர்னருக்கு மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். இதனையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. 

இதன்பின்னர், தமிழக முதல்-அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... எனக்கூறி மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

மு.க. ஸ்டாலினுடன்  அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.  தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்ட மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று பதவியேற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஐந்து மக்கள் நல அறிவிப்புகளை அரசு உத்தரவாக்கி இன்று வெளியிட்டமைக்கு என்னுடைய மகிழ்ச்சி நிறைந்த மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.
3. முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4. டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; உற்சாக வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
5. டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.