மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை + "||" + rain in Nellai district

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

தமிழகத்தில் கோடையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும் அவ்வப்போது பரவலாக மழையும் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலை நேரங்களில் மேகங்கள் திரண்டு மிதமான மழை பெய்கிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பாளையங்கோட்டை, அம்பை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-1, சேர்வலாறு-2, மணிமுத்தாறு-4, நம்பியாறு-4, அம்பை-25, சேரன்மாதேவி-5, நாங்குநேரி-4, களக்காடு-2, பாளையங்கோட்டை-5, நெல்லை-15.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2. பெரம்பலூரில் பலத்த மழை
பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.
3. சோமாலியாவில் பலத்த மழைக்கு 4 லட்சம் பேர் பாதிப்பு: ஐ.நா. அமைப்பு
சோமாலியா நாட்டில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா. மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.
4. தஞ்சையில், சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன
தஞ்சையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
5. கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.