மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை + "||" + rain in tenkasi district

தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை

தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை
தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தென்காசியில் நேற்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பின்னர் காலையில் வெயில் அடித்தது. பகல் 12 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பனவடலிசத்திரம் பகுதிகளான மருக்காலங்குளம், மேல நரிக்குடி, நரிக்குடி, பெருமாள்பட்டி, வெங்கடாசலபுரம், மடத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. 

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கருப்பாநதி-4, குண்டாறு-3, ஆய்குடி-4, தென்காசி-9, செங்கோட்டை-7, சங்கரன்கோவில்-22, சிவகிரி-3.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2. பெரம்பலூரில் பலத்த மழை
பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.
3. சோமாலியாவில் பலத்த மழைக்கு 4 லட்சம் பேர் பாதிப்பு: ஐ.நா. அமைப்பு
சோமாலியா நாட்டில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா. மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.
4. தஞ்சையில், சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன
தஞ்சையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
5. கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.