மாவட்ட செய்திகள்

புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம் + "||" + CM Rangasamy's picture uploaded on Puducherry government website

புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம்

புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம்
புதுச்சேரி அரசின் இணையதளத்தில் மாநில நிர்வாகியான கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் துறைத்தலைவர்கள் படம் இடம் பெற்றிருக்கும்.

அதன்படி புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கிடையே புதுவையில் காங்கிரஸ் அரசின் ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அரசு இணையதள பக்கத்தில் நாராயணசாமியின் படம் நீக்கப்பப்பட்டது.

புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்படி புதுச்சேரியின் முதல்-அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்டார். அதைத்தொடர்ந்து புதுவை அரசின் இணையதள பக்கங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதா: 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமறு 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
2. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 3,562 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஜூலை 1-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஜூலை 1-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
4. புதுச்சேரியில் 60 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைப்பு
புதுச்சேரியில் 60 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
5. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 353 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 4,125 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.