தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு


தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 8 May 2021 12:53 PM GMT (Updated: 2021-05-08T18:31:55+05:30)

தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சத்திரப்பட்டி, 

கள்ளிமந்தையம் அருகே உள்ள கொ.கீரனூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 75). இவர், அந்த பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். 

பின்னர் அந்த வாலிபர், செல்லம்மாளை மிரட்டி அவர் காதில் அணிந்திருந்த அரைபவுன் கம்மலை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story