நாளை முதல் முழு ஊரடங்கு: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்


நாளை முதல் முழு ஊரடங்கு: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2021 5:31 PM GMT (Updated: 8 May 2021 5:31 PM GMT)

நாளை முதல் முழு ஊரடங்கு: டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர்.

தர்மபுரி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் திறக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த மது பிரியர்கள் நேற்று காலை முதலே அந்தந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 68 டாஸ்மாக் கடைகளிலும் நேற்று மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அந்தந்த கடைகளில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வரும் மது பிரியர்களுக்கு மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படுகிறதா?, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story