குமரியில் கொரோனா நிவாரண நிதி 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது


குமரியில் கொரோனா நிவாரண நிதி 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 May 2021 7:33 PM GMT (Updated: 8 May 2021 7:33 PM GMT)

குமரியில் கொரோனா நிவாரண நிதி வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதில் 5½ லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

நாகர்கோவில், 
குமரியில் கொரோனா நிவாரண நிதி வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதில் 5½ லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
கொரோனா நிவாரண நிதி
சட்டசபை தேர்தலின் போது கொரோனா நிவாரண நிதியாக அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.4000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக முக.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை அதிரடியாக அறிவித்தார். அந்த அறிவிப்புகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தன.
15-ந் தேதி முதல்...
கொரோனா நிவாரண நிதி 2 தவணையாக வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் முதல் தவணை ரூ.2 ஆயிரம் இந்த மாதமே (அதாவது மே மாதம்) வழங்கவும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். மேலும் நிவாரண நிதி வழங்கும் திட்டமானது நாளை (திங்கட்கிழமை) முதல் சென்னையில் அமலுக்கு வருகிறது.
குமரி மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன்கடைகளிலும் அந்ததந்த பகுதி மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 51 ஆயிரத்து 279 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெற உள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story