7 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வினியோகம்; நாளை தொடங்குகிறது


7 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வினியோகம்; நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 May 2021 1:42 AM IST (Updated: 9 May 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வினியோகிக்கும் பணி நாளை தொடங்குகிறது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வினியோகிக்கும் பணி நாளை தொடங்குகிறது.
கொரோனா நிவாரணம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக நேற்று முன்தினம் பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் இந்த மாதத்தில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதற்கிடையே தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவித்தொகையை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
7 லட்சம் குடும்பங்கள்
அதன்படி தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1,152 ரேஷன் கடைகளில் மொத்தம் 7 லட்சத்து 13 ஆயிரத்து 910 அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story