ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
ஆணையாளர் ஆய்வு
ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
அங்கு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களை வரிசையாக உள்ளே அனுப்புவது, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்குவது, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, மார்க்கெட் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது போன்றன குறித்து அதிகாரிகளுக்கு ஆணையாளர் இளங்கோவன் அறிவுறுத்தினார்.
புதிய கட்டுப்பாடுகள்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காய்கறி மார்க்கெட் மதியம் 12 மணி வரை திறக்கப்படுகிறது. தற்போதுள்ள நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மார்க்கெட்டுக்கு வரும் நபர்கள் வி.சி.டி.சி.ரோடு வழியாக உள்ளே வந்து, விளையாட்டு அலுவலகம் எதிரில் உள்ள மற்றொரு வழியாக வெளியேற வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் உள்ளே சென்றவர்கள் வெளியில் வந்த பிறகு மற்றவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மார்க்கெட்டுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். நடைபாதையில் கடை போடக்கூடாது. மாநகராட்சியின் சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story