அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில்  காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 8 May 2021 8:44 PM GMT (Updated: 8 May 2021 8:44 PM GMT)

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை ஆனது.

அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை ஆனது. 
காங்கேயம் காளை மாடு
அந்தியூர் கால்நடை சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.  
இதில் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி       குறைந்தபட்ச விலையாக ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன. 
ரூ.65 ஆயிரம்
நாட்டு பசு மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையும், சிந்து பசு மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், ஜெர்சி பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், பர்கூர் இன பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. 
ஈரோடு, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், மேட்டூர், கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர். 

Next Story