பூந்தமல்லியில் அரசு பஸ்களில் மகளிருக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.


பூந்தமல்லியில் அரசு பஸ்களில் மகளிருக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 9 May 2021 2:15 AM IST (Updated: 9 May 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பூந்தமல்லி, 

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பொறுப்பேற்றதையடுத்து, தேர்தல் வாக்குறுதியான 5 திட்டங்களை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டார். அதில், தமிழகம் முழுவதும் அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், பூந்தமல்லியில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தை பூந்தமல்லி தி.மு.க., எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் பெண் பயணிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி இலவச பயணத்தை துவக்கி வைத்தார். இதில் பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், நகர செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Next Story