முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து


முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 8 May 2021 9:08 PM GMT (Updated: 8 May 2021 9:08 PM GMT)

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பஸ், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளதால் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அந்தவகையில் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (10-ந்தேதி) அதிகாலை 4 மணி முதல் 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் முழுஊரடங்கு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்குக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இன்று விடுமுறை கால அட்டவணைப்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்களை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது என்றும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story