ஊதியம் வழங்க கோரி சேலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த செவிலியர்கள்


ஊதியம் வழங்க கோரி சேலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த செவிலியர்கள்
x
தினத்தந்தி 9 May 2021 4:15 AM IST (Updated: 9 May 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

ஊதியம் வழங்க கோரி சேலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த செவிலியர்கள்.

சேலம்,

சேலம் மாநகரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் நிரந்தரமாகவும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஊதியம் வழங்க கோரி மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து செவிலியர்கள் கூறும் போது, நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. எங்களுக்கும் இதுவரை முறையாக ஊதியம் கிடைக்கவில்லை. ஆகவே உடனடியாக ஊதியம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story