கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்க தடை
ஆடு, கோழிகள் விற்க தடை
எடப்பாடி:
எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இங்கு எடப்பாடி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆடு, கோழிகளை விற்க கொண்டு வந்தனர். இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சந்தை மூடப்படுவதாகவும், ஆடு, கோழிகளை விற்க தடை விதிக்கப்படுவதாகவும் கொங்கணாபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்ய முயன்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தி பொதுமக்களை திருப்பி அனுப்பி வைத்தனர். பேரூராட்சி நிர்வாகத்தினரின் தடை காரணமாக சனிக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் வாரச்சந்தை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story