வடமாநில தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஆம்னி பஸ்சை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி சோதனை
கோவையில் அதிகமான வடமாநில தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஆம்னி பஸ்சை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி சோதனை நடத்தினர்.
கோவை
கொரோனா பரவலை நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து கோவையில் பணியாற்றிவரும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அரசு மற்றும் தனியார் பஸ் மூலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் கோவையில் இருந்து பீகார், மராட்டியம் போன்ற வட மாநிலத்துக்கு செல்லும் பஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்வதாக மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று இரவு 11 மணியளவில் கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சிக்னலில் நின்று கொண்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு தனியார் ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில் பீகார் மாநிலம் செல்வதற்காக ஆம்னி பஸ்சில் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர், கண்டக்டரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story