மம்தா பானர்ஜியை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


மம்தா பானர்ஜியை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2021 6:02 AM IST (Updated: 9 May 2021 6:02 AM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக அமோக வெற்றி பெற்றது.

ஊத்துக்கோட்டை, 

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அங்கு சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பா.ஜ.க.வினரை குறிவைத்து மம்தா கட்சியினர் தாக்கியதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து பா.ஜ.க.வினர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூண்டி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில அரசு தொடர்பு துறை தலைவர் பாஸ்கரன், மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் மம்தா பானர்ஜியை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story