மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள், பாலிதீன் பைகள்


மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள், பாலிதீன் பைகள்
x
தினத்தந்தி 9 May 2021 7:47 PM IST (Updated: 9 May 2021 8:02 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள், பாலிதீன் பைகளால் வன விலங்குகளும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

வாணாபுரம்,

தச்சம்பட்டு மையமாகக் கொண்டு சுற்று வட்டாரப் பகுதியான மெய்யூர், கண்ணமடைகாடு, விருதுவிளங்கினான், சோவூர், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசுக்கு சொந்தமான காப்புக் காடுகள் மற்றும் வன பகுதிகள் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்த வனப் பகுதிகளில் மான், முயல், குரங்குகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமின்றி பல்வேறு வகையான பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் வனப்பகுதியில் மூட்டை மூட்டையாக மருந்துக்கழிவுகள், பாலித்தீன் பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி துர்நாற்றம் வீசுகிறது. ஒரு சில பகுதிகளில் இருந்து மாட்டிறைச்சி, கோழி இறைச்சி கழிவுகளும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டுகிறார்கள். இதனால் வன விலங்குகளும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. 

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வனப் பகுதியிலும், சாலையோரமும் மூட்டை மூட்டையாகக் கொட்டப்படும் கழிவுகளை அகற்றுவது மட்டுமின்றி அவ்வாறு கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story