வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்


வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 9 May 2021 8:23 PM IST (Updated: 9 May 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்கு வரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவை

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்கு வரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட்டன.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்து விட்டது. இதையடுத்து திங்கட்கிழமை முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதனால் பஸ் உள்ளிட்ட பயணிகளுக்கான பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படாது.

இதன்காரணமாக கடந்த 2 நாட்களாக கோவையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.

 இதனால் கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் பஸ்சில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் ஓடியதுடன், முண்டி யடித்துக்கொண்டு அதில் ஏறினர். இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்புடன் பயணிகள் பஸ்சில் ஏற்றப்பட்டனர்.

9,500 பேர் பயணம் 

பயணிகள் கூட்டத்தை தொடர்ந்து கோவையில் இருந்து மதுரை, திருச்சி, நாமக்கல், நெல்லை உள்ளிட்ட வெளியூர்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட்டது. இதில்  9,500 பேர் பயணம் செய்து உள்ளது. 

இதுகுறித்து கோவை மண்டல போக்குவரத்து உதவி பொதுமேலாளர் செந்தில் குமார் கூறியதாவது:-

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி 2-வது நாளாக பயணம் செய்தனர். இந்த பஸ்களை பெண்கள் எளிதாக அடையாளம் காண வசதியாக சாதாரண டவுன் பஸ்களில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

கூடுதல் பஸ்கள் இயக்கம்

கோவையில் இருந்து திருச்சி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழக்கமாக 90 பஸ்கள் இயக்கப்ப டும். கடந்த 2 நாட்களாக கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக 50 பஸ்கள் சேர்த்து 140 பஸ்கள் இயக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, நாகர்கோவில், தென்காசி, வேளாங்கண்ணி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.


Next Story