ராணிப்பேட்டையில் சமூக விலகலை கடைபிடிக்காத டாஸ்மாக் கடைக்கு அபராதம்
ராணிப்பேட்டையில் சமூக விலகலை கடைபிடிக்காத டாஸ்மாக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ராணிப்பேட்டை பகுதியில் இந்த உத்தரவுகளை செயல்படுத்தும் விதத்தில் ராணிப்பேட்டை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில், நகர துப்புரவு அலுவலர் அப்துல் ரஹீம், ஆய்வாளர்கள் முருகன், தேவிபாலா, கட்டிட ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ராணிப்பேட்டை வண்டி மேட்டுத்தெரு, ஆர்.ஆர்.ரோடு, பஜார் வீதி, எம்.பி. டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.ஆர்.ரோடு பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத அரசு மதுபான கடைக்கு ரூ.5,000 அபராதம் விதித்தனர். இந்த கடைக்கு ஏற்கனவே சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்திற்காக ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
நேற்று மட்டும், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மளிகை கடை, செல் போன் கடை, சூப்பர் மார்க்கெட், ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட 25 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.15,500 அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story