ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று
ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பொள்ளாச்சி நகரத்தில், 40 பேர்,பொள்ளாச்சிவடக்கு ஒன்றியத்தில் 19 பேர், தெற்கு ஒன்றியத்தில், 32 பேர்என மொத்தம் 91 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
நேற்று முன்தினம் 37 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஆனைமலை ஒன்றியத்தில் நேற்று 39 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள்கூறியதாவது:-
பொள்ளாச்சி மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கொரோனாபரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்.
முகக்கவசம் மூக்கை முழுமையாக மறைத்து இருக்கவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும்.
அடிக்கடி கையைசோப்புபோட்டு கழுவ வேண்டும்.இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
அரசால்தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புசக்தி உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரசு கூறும் வழிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து கொரோனாவை விரட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
-----------
Related Tags :
Next Story