தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய 7 பேர் கைது


தூத்துக்குடியில்  கஞ்சா கடத்திய 7 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 9:07 PM IST (Updated: 9 May 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, மே.10-
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திய 7 பேர் கும்பலை கொரோனா அச்சம் காரணமாக இலங்கை கடற்படை கைது செய்தது..
கஞ்சா
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகுகளின் மூலம் இலங்கைக்கு விரலி மஞ்சள், பீடி இலை, வெங்காய விதைகள் உள்ளிட்டவை அதிகம் கடத்தி செல்லப்படுகின்றன. இதனால் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், உளவுத்துறை உள்ளிட்ட பாதுகாப்புதுறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்களில் அடுத்தடுத்து பீடி இலை, விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை தூத்துக்குடியில் இருந்து கடத்தி சென்ற 17 பேர் தூத்துக்குடி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற பொருட்கள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். இலங்கையில் கொரோனா தொற்று அபாயத்தால் இந்த கடத்தல் காரர்கள் இலங்கை கடற்படையால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கைது
இதுபோன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீழவைப்பாரில் இருந்து ஒரு நாட்டுப்படகில் 7 பேர் கஞ்சா கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை இலங்கை அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகில் 80 பண்டல்களில் இருந்த 235 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பி அனுப்பினர்
பின்னர் கொரோனா அச்சம் காரணமாக பிடிபட்ட அந்த நபர்களை கைது செய்து நாட்டிற்குள் அழைத்து செல்லாமல், கஞ்சா கடத்தி வந்த கும்பலை எச்சரித்து அதே படகில் மீண்டும் தூத்துக்குடிக்கே செல்லுமாறு, சர்வதேச கடல் எல்லை வரையில் வந்து அனுப்பி வைத்து உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story